Saturday, January 14, 2012

உங்கள் உயரத்துக்கு ஏற்ற சரியான எடையை-அறிந்துகொள்ள

 

உயரம்.எடை..இலவச சாப்ட்வேர். height.weight.free software.

ஆளைப்பார்த்து எடை போட்டுவிடலாம் என்று சொல்லுவார்கள். நீங்கள் உங்கள் உயரத்து ஏற்ற எடையில் இருக்கின்றீர்களா? எடை உங்கள் உடல்வாகுக்கு அதிகமாக உள்ளதா-அல்லது குறைவாக உள்ளதா? எளிதாக அறிந்துகொள்ளலாம்.இது உண்மையிலேயே ஆள் உயரம்-எடை பார்த்து அவர்கள்பற்றி சொல்லிவிடும் சின்ன சாப்ட்வேர்.குறிப்பிட்ட உயரத்திற்கு குறிப்பிட்ட எடைதான் இருக்கவேண்டும். அது குறைந்தாலும் கஷ்டம். அதிகமானாலும் கஷ்டம்.231 கே.பி. அளவுள்ள இந்த குட்டியூண்டு சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

clip_image001

இதில் உங்களது உயரத்தை மீட்டர் அல்லது சென்டிமீட்டரிலோ-அ

டிகணக்கிலோ தேர்வு செய்து கீழே உள்ள விண்டோவில் உங்களது எடையை குறிப்பிட்டு கிலோ கிராமினை தேர்வு செய்யவும்.இதில் முக்கியமாக நீங்கள் ஆணா -- பெண்ணா என்பதனை தேர்வு செய்யவும்.

clip_image002

பின்னர் இதில் உள்ள Calculate கிளிக் செய்ய உங்களுக்கு உங்கள் எடை சரியாக உள்ளதா - அதிகமா - குறைவா என அதில் உள்ள ஸ்லைடரில் காண்பித்துவிடும்;. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

clip_image003

எடை குறைவாக இருந்தால் அதனை அதிகபடுத்தவும். அதிகமாக இருந்தால் குறைக்கவும் பாருங்கள். சின்ன சாப்ட்வேர் என்பதால் இது கம்யூட்டரில் அதிக இடம் எடுத்துக்கொள்ளாது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

No comments:

Post a Comment