Saturday, January 14, 2012

விதவிதமான போட்டோ ஆல்பம் நாமே உருவாக்க. ஆல்பம்.புகைப்படம்.திருமணம்.பிறந்தநாள்.காதலர்தினம்.. album.design.photo.

 

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் என்னற்ற PSD டிசைன் பைல்கள் உள்ளன.ஆனால் நமது விருப்பதற்கேற்ப - திருமணம்-பிறந்தநாள்-காலண்டர்-அன்னையர் தினம் - குழந்தைகள் தினம் - காதலர்தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

clip_image001

இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உங்களுக்கு Scropbook.Greeting Card.Calendor.என எது நமக்கு தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளளலாம்.

clip_image002

Scrapbook ல் உப தலைப்புகளாகHoliday.Birthday.Family.baby.Kids.Wedding.விண்டோக்கள் இருக்கும். நமக்கு எது தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.

clip_image003

தேர்வு செய்யப்பட்ட விண்டோவில் நமக்கு அதிக அளவு டிசைன்கள் இருக்கும். நமது டேஸ்ட்டுக்கு ஏற்றவாறு டிசைனை தேர்வு செய்து அதனை டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

clip_image004

டிசைனை தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளலாம்.புகைப்படங்களை Autofill முறையிலும் தேர்வு செய்து கொள்ளலாம்.ஓவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசைன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் டிசைன்களை அதிகப்படியாக சேர்த்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

clip_image005

ஒவ்வொரு புகைப்படத்தையும் நாம் வேண்டிய டிசைனுக்குள் புகைப்படம் வருவதுபோல் செட் செய்துகொள்ளலாம் .கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

clip_image006

அவர்கள் கொடுத்துள்ள டிசைன்கள் நமக்கு போதவில்லையென்றால் அதிகப்படியான டிசைன்களை நாம் இணைத்துக்கொள்ளலாம்.அழஅழகான பூங்கொத்துக்களை கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேவையான இடத்தில் இணைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்..

clip_image007

அதைப்போலவே ஒவ்வொரு புகைப்படத்திற்கும் நாம் கார்டூன் புகைப்படங்களை கொண்டுவரலாம்.கீழேஉள்ள விண்டோவில் பாருங்கள்.

clip_image008

சிம்பிளான -அழகான டிசைன் கீழே:-

clip_image001[1]

நாம் உருவாக்கும் டிசைனை தனியோ சேமித்துவைத்துக்கொள்ளலாம்.பிரிண்ட் எடுக்கலாம்.மெயில் அனுப்பபலாம்.நாம் நம்மிடம் உள்ள புகைப்படங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தி ஆல்பமாக சேமித்துவைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பர்ருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.

No comments:

Post a Comment